“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ” கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி நடப்பவனும் கோலை வீசி குலாவி நடப்பானே . என சித்தர்கள் இதனைப் பற்றி பாடியிருக்கிறார்கள். இஞ்சி,சுக்கு,கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத,பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை நோயற்ற வாழ காலையில் இஞ்சி சாறு நண்பகலில் சுக்கு இரவில் கடுக்காய் இதை தினந்தோறும் பின் தொடர்ந்தாள் நோயற்று வாழ்வது சாத்தியமே நோயற்று வாழ குடல் சுத்தம் மிகவும் முக்கியம் அதற்காக கடுக்காய் பொடி உண்ணுவது அவசியம் குடலில் உள்ள தேக்கமே வியாதியின் விதை ஆகும் எனவே குடல் சுத்தம் மிகவும் அவசியம் . இதற்கு இஞ்சி உதவுகிறது உடலில் தேவையில்லாத நஞ்சு சேர்ப்பது உடல் பருமனுக்கும் செரிமானத்திற்கும் கெட்ட கொழுப்பு இருக்கும் மற்ற வியாதிகளுக்கும் காரணமாகும். தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு இஞ்சி மிகவும் அவசியம். இதற்கு சுக்கு இரவில் கடுக்காய் உதவுகிறது. சுக்கு மூளை ...