ஆரோக்கியமான உறக்கம்

மனித வாழ்க்கையில் மூன்றில் ஒரு பகுதி, தூக்கத்தில் தான் கழிகிறது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை புதுப்பிக்கவும், சோர்வை நீங்கி புத்துணர்வு பெறவும் தூக்கம் முக்கியமானதாகும். இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்பது அறிவியலாளர்கள் கருத்தாகும். எப்படி தூங்க வேண்டும் : திசைகளில் படுக்கும் முறை அனைத்தும் பூமியில் உள்ள காந்த சக்தியை சார்ந்ததே. காந்த சக்தி மேலே படும்போது உடலில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில் இது கொடுக்கப்பட்டுள்ளது கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். தூங்கும் முறை இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே...