ஆரோக்கியமான உறக்கம்
மனித வாழ்க்கையில் மூன்றில் ஒரு பகுதி, தூக்கத்தில் தான் கழிகிறது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை புதுப்பிக்கவும், சோர்வை நீங்கி புத்துணர்வு பெறவும் தூக்கம் முக்கியமானதாகும்.
இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்பது அறிவியலாளர்கள் கருத்தாகும்.
எப்படி தூங்க வேண்டும் :
திசைகளில் படுக்கும் முறை அனைத்தும் பூமியில் உள்ள காந்த சக்தியை சார்ந்ததே. காந்த சக்தி மேலே படும்போது உடலில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில் இது கொடுக்கப்பட்டுள்ளது
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் அதிர்ச்சி உண்டாகும்.
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும்.
தூங்கும் முறை
இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.
தூக்கத்திற்கும் முன் செய்ய வேண்டியவை
வீட்டுக்குள்ளேயே சிறு நடை பயிற்சி செய்ய வேண்டும்.
மலம் கழித்துவிட்டு தூங்கவேண்டும்..
சிறிது நீர் அருந்தி விட்டு தூங்க வேண்டும்.
குளித்துவிட்டு பார்ப்பது சிறப்பு.
முகத்தை மூடியோ காலை விரித்தோ
முதுகு மேல் நோக்கியோ படுக்கக்கூடாது.
மொபைல் போன் பயன்படுத்திக் கிட்டோம் கம்ப்யூட்டர் பயன்படுத்திய உடனும் புத்தகம் படிச்சுக்கிட்டு தூங்கக் கூடாது
தூங்கும் முன் துவங்கும் நிலையில் படுத்து நமது மூச்சுக்காற்றை கவனிக்க உடலை லேசாக வைத்து நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் உறங்குவது ஆரோக்கியமானதும் ஆகும்
முந்தைய பதிவுக்குச் செல்ல அடுத்த பதிவிற்கு செல்ல
Comments
Post a Comment