ஒவ்வாமை (allergy)
ஒவ்வாமையில் இருந்து விடுபடும் எளிய முறைகள்
உடலால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பொருள் உணவாகவோ, மருந்தாகவோ, தூசியாகவோ உள்ளே நுழையும்போது உடல் தனது எதிர்ப்பைக் காட்டும். ஒவ்வாமை எந்த நேரத்திலும், எந்த வடிவத்திலும் வரலாம். ஒவ்வாமையைச் சரியாகப் புரிந்துகொண்டு உடனடியாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.காற்று, நீர், உணவுப் பொருள்கள், ஊசி மருந்துகள், பிராணிகள் மூலம் ஒவ்வாமை ஏற்படும்
நோயின் பாதிப்பு:
ஒவ்வாமை ஏற்படும் போது மூக்கில் அரிப்பு ஏற்படும். முகம், வாய், கண், தொண்டை, தோல் ஆகியவற்றில் அரிப்பு ஏற்படும். மூக்கு ஒழுகிக் கொண்டே இருக்கும். எந்த வாசனையையும் முகர்ந்து பார்க்க முடியாது. தும்மல் ஏற்பட்டு கண்ணில் இருந்து தண்ணீர் வரும். பின்னர் மூக்கு, காது அடைபடும். இருமலும் வரும்.
தொண்டை கரகரப்பு ஏற்படும். தொடர்ந்து அசதியும், தலைவலியும் இருக்கும்.உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உடை, உறைவிடம் வரை எது வேண்டுமானாலும் ஒருவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். உதாரணத்துக்கு... முட்டை, பால், பாதாம், இறால், சீஸ், மகரந்தம் மற்றும் குறிப்பிட்ட சில மருந்துகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சிலருக்கு வாட்ச், கவரிங் நகைகள், நிக்கல், தங்கம், குரோமியம் உள்ளிட்ட உலோகங்கள் கூட ஒவ்வாமையை உருவாக்கலாம்.
ஒவ்வாமையில் இருந்து தீர்வு:-
- ஒவ்வாமைகுறைய
கேரட், பீட்ருட், வெள்ளரி ஆகியவைகளின் சாறு எடுத்து மூன்றையும் கலந்து தினமும் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் ஒவ்வாமை குறையும்.
- வெற்றிலை, மிளகு இவற்றை மென்று சாப்பிட ஒவ்வாமை குறையும்.
- வெள் எருக்கம் பூ, கிராம்பு இவற்றை வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட ஒவ்வாமை தீரும்.
Comments
Post a Comment