இதயத்தை காக்கும் செம்பருத்தி



                 இதயத்தை காக்கும் செம்பருத்தி



                          அன்பை கொடுக்கும் இதயம் படபடப்பு ஏற்பட்டால். நம்மீது உள்ள அன்பும் இதயத்தைக் எல்லாம் துடிதுடிக்கும். அந்த அன்பை காப்பாற்ற உங்கள் இதயம் மிக முக்கியம். இதற்கு காவலனாக இருப்பவள் செம்பருத்தி. ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்திதான் நல்லது. காலையில் எழுந்தவுடன் இரண்டு அல்ல மூன்று செம்பருத்தி பூவை பறித்து அதிலுள்ள இதழ்களை மட்டும் பிரித்து சாப்பிட்டு வந்தால் இதயநோய் வராது. ஏற்கனவே வந்து இருந்தாலும் குணமாகிவிடும்.




       நோயுள்ளவர்கள் ஆறு செம்பருத்தியின் இலைகளை மட்டும் எடுத்து அத்துடன் மூழ்கும் அளவுக்கு தாராளமாக தண்ணீரை விட்டு நன்றாக காய்ச்ச வேண்டும். இதில் காலைல 6 டீஸ்பூன் மாலையில் 6 டீஸ்பூன் இன்று 20 நாளைக்கு தொடர்ந்து குடித்து வர இதய படபடப்பு, இதய வலி, அடைப்பு , யாவும் குணமாகிவிடும். கசாயத்தை குடிக்கும்போது தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம் அதைவிட தேன் மிகச்சிறந்தது .

                                                  இதுமட்டுமல்லாமல் கல்லீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கும் குழந்தைகளுக்கு வரக்கூடிய வயிற்றுவலி வயிற்றுப்போக்கு வயிற்று உப்புசம் கொடுக்கலாம். நோய் இல்லாதவர்களும் தாராளமாக குடிக்கலாம்.

அதிக படபடப்புகளுக்கு

காலையும்,மாலையும் மாசிக்காயை பால்விட்டு அரைத்து நாவால் சுவைத்து வர இதய படபடப்பு குறையும்.(எச்சரிக்கை அதிகமானால் மயக்கம் வரும்)

இதயத்தில் ஏற்படும் சில வலிகளுக்கு

10 நாட்கள் கரும்துளசி இலை,செம்பருத்தி இலை கஷாயம் சாப்பிட்டு வர இதயத்தில் குத்தும் வலி குணமாகும்.

மார்பு வலிக்கு

இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வருவதால் மார்பு வலியில் இருந்து நிவாரணம் காணலாம்.

இருதய நோய்க்கு

மருதம்பட்டை செம்பருத்தி பூ கஷாயத்தை 48 நாட்கள் சாப்பிட்டு வருவதால் இருதய நோய் குணமாகும்.

அபான முத்திரை பயன்படுத்தலாம்




இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஒரு அற்புதமான முத்திரை இது. இதை. தொடர்ந்து செய்து வந்தால் இதய நோய் வராது. இதய நோய் இருப்பவர்களும் மருந்து மாத்திரைகளோடு இந்த முத்திரையையும் செய்து்வருவது நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும்.விரிப்பின் மீது, பத்மாஸனம், அர்த்த பத்மாஸனம்,அல்லது சாதரணமாகசம்மணமிட்டு
அமரலாம்.  முடியாதவர்கள், நாற்காலியில் அமர்ந்து செய்யலாம்.இருக்கை சமமாக இருக்க வேண்டும்.கால்கள் தரையில் பதிந்திருக்க வேண்டும்.
இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 40 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரங்களிலும் செய்யலாம். இந்த முத்திரை நெஞ்சு வலி மற்றும் மாரடைப்பு போன்ற அனைத்து இருதய சம்பந்தப்பட்ட குணப்படுத்தும். இதனால் இதற்கு “மிருத்யு சஞ்சீவி” என்று பெயர்.இது உயிர் காக்கும் முத்திரை. இருதயத்தை பலப்படுத்தி இருதய நோய் வராமல் பாதுகாக்கும். இதை செய்வதால் உயர் இரத்த அழுத்த நோய்  15 நிமிடங்களில் குறையும். நெஞ்சு படபடப்பு குறையும்.காலை, மாலை இருவேளையும் 15-40 நிமிடங்கள் வரை செய்யலாம். சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகுதான் செய்ய வேண்டும். வாந்தி, பேதி பிரச்சனை இருக்கும்போது செய்யக் கூடாது.

SUBSCRIBE OUR PAGE AND
 FOLLOW FOR OUR IYARKAIVATHIYAM UPDATES

FOLLOW AS IN FACEBOOK ALSO     


                                                    முந்தைய பதிவுக்குச் செல்ல
                                                       அடுத்த பதிவிற்கு செல்ல





Comments

Popular posts from this blog

நீரிழிவு நோய் (diabetes)

நீர் குடிக்கும் முறை