நீர் குடிக்கும் முறை
நீர் குடிக்கும் முறை
மனித உடலில் 60 சதவீதம் நீரால் ஆனது.நாம் வாழ்வதற்கு நீர் மிகவும் அவசியமானது அந்த நீரை நாம் எப்படி பருக வேண்டும் என்று தெரிந்து குடித்தாள் நீரும் மருந்தே. நீர் மிக அதிகமாகவும் இல்லை குறைவாகவும் குடித்தாள் கிட்னி கல் வருவதற்கு வாய்ப்புண்டு
தண்ணீரை அண்ணாந்து மடக்கு மடக்கு என்று வேகமாக குடிக்க கூடாது. நீரை மெதுவாக வாய் வைத்த பழச்சாறு குடிக்கும் வகையில் நீரை குடிக்க வேண்டும். நீரை குடிக்கும் போது அமர்ந்து குடிக்க வேண்டும் ஏனென்றால் நீரானது அனைத்து செல்களுக்கும் போய் சேர்ந்துவிடும்.அண்ணாந்து குடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அண்ணாந்து நீரை வாயில் ஊற்றி வாயில் அடக்கி அதை மெதுவாக முழுங்க வேண்டும்.
நீரை எப்படி சுத்திகரிக்க வேண்டும்
எப்போதும் குளிர்ச்சியாகத் தண்ணீர் பருக ஆசைப்படுபவர்கள், மண்பானையில் தண்ணீரைச் சேமித்துவைத்துப் பருகலாம். குளிர்ச்சி தருவதோடு சேர்த்து, நீரை இயற்கையாகச் சுத்திகரிக்கும் திறனும் மண்பானைக்கு உண்டு. மண் பானையில் குடிநீரை ஊற்றிவைத்து, இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால், அந்தத் தண்ணீரில் உள்ள மாசுப் பொருள்கள் பலவற்றையும் மண்பானை உறிஞ்சிவிடும். அதன் பின்னர், நமக்கு தூய நீர் கிடைக்கிறது. புதிதாக வாங்கிய மண்பானையில் இரண்டு அல்ல மூன்று தடவை தண்ணீர் ஊற்றி தேக்கிவைத்த அதைக் கீழே ஊற்றிவிட்டு அதுக்கப்புறம் தண்ணீரை ஊற்றி அதை பருக ஆரம்பிக்கலாம் ஒவ்வொரு முறையும் தண்ணீர் தீர்ந்தவுடன் பின்னர் மண் பானையை ஒரு அலசு அலசி விட்டு பின்பு நீரை நிரப்பலாம்
.
உங்களிடம் செப்பு காசு செப்பு டம்ளர் இல்லை
ஏதேனும் செப்பு பொருள் உங்களிடம் இருந்தால் அதை மண் பானைக்குள் போட்டுவைத்து அந்த நீரை
பருகினால் இன்னும் உடலில் ஆரோக்கியம் மற்றும் பிராணன் அதிகமாக உங்கள் உடலுக்கு கிடைக்கும். நான் கூறியது எளியமுறையில் இது மட்டும்
இல்லை இன்னும் ஒன்று இரண்டு முறை உள்ளது ஆனால் இந்த எளிய முறையை பின்பற்றினாலே போதும்.எப்போது நீர் குடிக்க வேண்டும்
- வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஒரு டம்ளர் நீர் பருகவேண்டும் ஏனென்றால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
- வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் வேர்வை அடங்கியவுடன் ஒரு டம்ளர் நீர் பருகவேண்டும் அப்பொழுது அலைந்து திரிந்து வந்த உடலில் இருக்கும் வெப்பத்தை குறைக்கும்.
- காலை எழுந்தவுடன் அரை லிட்டர் நீராவது பருக வேண்டும் ஏனென்றால் குடலை சுத்தம் செய்து அது மலத்தை வெளியேற்றும்.
- இரவு படுக்கும்போது சிறிது அளவில் நீரருந்த வேண்டும் என்றால் காலை செரிமானத்திற்கு சற்று உதவும்.
முந்தைய பதிவுக்குச் செல்ல
அடுத்த பதிவிற்கு செல்ல
Comments
Post a Comment