வாய் துர்நாற்றம்
நாம் மற்றவர்களுடன் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருக்கும் போது எதிரில் உள்ளவர்கள் முகத்தைச் சுளிக்கிறார்கள் என்றால், அதற்கு நாம் பேசும் விஷயம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது நம் வாயிலிருந்து வரும் நாற்றம்கூடக் காரணமாக இருக்கலாம்.
எதனால் துர்நாற்றம் அடிக்கிறது ?
வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர் நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள்.

உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருந்து அமிலமானது மேல்நோக்கி வந்து போகும். இதனாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Re-flux என்பார்கள்.
அஜீரணக் கோளாறுகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக்குழாயில் சென்ற உணவானது நான்கு மணி நேரத்திற்குள் ஜீரணமாகிவிடும். நான்கு மணி நேரத்திற்கு மேலும் ஜீரணமாகாமல் உணவு மண்டலத்திலேயே உணவு தங்கும்போது வயிற்றில் ஏற்படும் புளித்த நாற்றம் வாய் வழியாக வந்து சேரும்.
இதற்குத் தீர்வு :
- லவங்க பட்டையை சிறிதளவு நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரை கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்
- சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிப்பது, காலை மாலை என இரு வேலையும் பல் துலக்குவது, பல் துலக்கும் சமயத்தில் நாக்கை சுத்தம் செய்வது போண்டவற்றை தினமும் கடை பிடித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். குடலை நன்கு சுத்தம் செய்வது மூலம் வாய் துர்நாற்றம் போகும்.
- ஏலக்காயை தினமும் மென்று வருவதன் மூலம் வாய்நாற்றத்தை தடுக்கலாம்
- கிராம்பை மென்று வாயில் போட்டு அடக்கிக் கொள்வது மூலம் வாய் துர்நாற்றத்தில் விடுபடலாம்
- நீரின் உப்பு உப்பு சேர்த்து கொப்புளித்து வருவதன் மூலம்வாய் துர்நாற்றத்தை விடுபடலாம்.
கண்டிப்பா தினமும் இருவேளை பல் துலக்க வேண்டும்.
Comments
Post a Comment