கோபத்தை குறைக்க சில வழிகள்
இயலாமையின் வெளிப்பாடே கோபம்
உங்களால் ஒரு செயல் செய்ய முடியவில்லை என்றால் கோபம் வெளிப்படும். நீங்கள் சொல்வதை உங்கள் நண்பர் கேட்க வில்லை என்றால் கோபம் வரும் ஏனென்றால் உங்களால் அவரை கேட்க வைக்க முடியவில்லை. ஒருவரது செயலோ சொல்லு உங்கள் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் உங்களுக்கு கோபம் வரும் ஏனென்றால் அதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு பொறுத்துக் கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு பக்குவம் இல்லை. உங்களுக்கு பக்குவம் இல்லாத காரணத்தினாலும் ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்ளாத முடியாத காரணத்தினாலும் பிறருக்கு உங்கள் கருத்துக்களை புரியவைக்க முடியாத நாளையும் அதாவது உங்களின் இல்லாமையினால் வெளிப்படுவதே கோபம். கோபம் என்பது நமது இயலாமை பொறுமையின்மை பக்குவம் இன்மை பயம் மற்றும் பதற்றம் இது போன்ற எதிர்மறையான உணர்வே கோபமாக வெளிப்படுகிறது.
உங்களது கோபம் சில சமயம் ஞாயம் ஆகும் இருக்கலாம் அநியாயமாகும் இருக்கலாம். அனைவரது கண்ணோட்டமும் வேறு வேறு என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கோபம் எப்பேர்ப்பட்ட உறவுகளையும் எப்பேர்பட்ட நட்புகளையும் முறித்துவிடும் .ஒருவேளை அந்த பத்து நிமிடம் நீங்கள் சற்று கோவத்தை அடக்கினாள்
அனைத்து உறவுகளும் மேம்படும். உங்களது நல்ல குணம் பத்து நிமிடம் கோபத்தினால் அனைவராலும் தவறாக புரிந்து கொள்வார்கள். அந்தப் பத்து நிமிடம் எப்படி கோபத்தை அடக்குவது என்பதை பார்ப்போம்.
கோபத்தால் ஏற்படும் விளைவுகள்.
1. நல்ல உறவுகளை இழந்துவிடுவார்கள்
2. கோபத்தால் தன் நிலையை மறந்து ஆத்திரப்பட்டு தேவையில்லாத விளைவுகளை உருவாக்குவார்கள்.
3. நீங்கள் விருப்பப்பட்டாத சொற்களையும் செயல்களையும் கோபம் தன் நிலையை மறந்து அதை செய்ய வைத்துவிடும்.
4. கோபத்தால் உடலில் உள்ள நூற்றுக்கணக்கான நரம்புகள் அதிவேகத்தில் செயல்படுவதால் அந்த நரம்பு சீக்கிரம் பாதித்துவிடும்.
5. அதிகம் கோபப்படுவதால் அதிக ரத்த அழுத்தம் உண்டாக்கி இருதய நோய்க்கு வழி வகுக்கும் இது மட்டுமின்றி மூளையின் செயல்பாட்டு திறனை குறைக்கும். இதனால் அதிகப்படியான ஞாபக மறதி கவனமின்மை ஏற்படும்.
கோவத்தை தவிர்ப்பதற்கு வழிகள்
உங்கள் எதிரே நின்று ஒருத்தரு உங்களை கோபப்படுத்தி நாள் அங்கிருந்து விலகிச் செல்லுங்கள் முடியாத பட்சத்தில் அவர்கள் பேசுவதை காதில் வாங்காமல் ஒன்று இரண்டு மூன்று என்று எண்ணிக் கொள்ளுங்கள்அல்லது உங்களுக்குத் தெரிந்த தெய்வத்தின் நாமத்தை மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டிருக்கலாம்.
உங்களை ஒருத்தர் கோவை படுத்தி விட்டு சென்றுவிட்டால் அவர்களை மீண்டும் சண்டையிட தோன்றினால் அந்நேரத்தில் ஒரு டம்ளர் நீரை மெதுவாக குடிக்கவும் அந்த நீர் எப்படி உங்கள் தொண்டைக்குள் செல்கிறது என்று கவனியுங்கள் அதேபோல கோபமும் போய்விடும்.
உங்களுக்கு மேல் உள்ளவர்கள் உங்களை கோபப்படுத்திய சென்றுவிட்டாள் அதை நினைத்து உங்களுக்கு கோபமும் ஆத்திரமும் ஏற்பட்டால் ஒரு பன்னீர் ரோஜாவை எடுத்து அதன் வடிவத்தை சற்று
கவனியுங்கள் கோபம் குறைந்து விடும் நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு பன்னீர் ரோஜாவை வைத்து அதை அடிக்கடி பாருங்கள் முடிந்தால் நேசியுங்கள் உங்கள் மனம் பஞ்சு போல் மெதுவாக சாந்தமாக ஆகிவிடும்(இது என் அனுபவ உண்மை).
கோபம் ஏற்படும் சமயத்தில் உங்களுக்கு பிடித்த பாடல்கள் சிரிப்பு நிகழ்ச்சிகளை பார்த்தால் கோபம் குறைந்துவிடும்.
நன்கு தூங்கி எந்திரிச்சா உங்கள் கோபம் உங்களை விட்டுப் போய்விடும்.
ஒருவர் மீது கோபம் 3 நாளைக்கு மேல் இருக்காது அதற்கு மேல் இருந்தால் அது ஈகோ அல்லது வெறுப்பு தான் இருக்கும்.
யோகா தியானம் மூச்சுப் பயிற்சி
போன்றவற்றை தினமும் செய்து பழகி வந்தால் நாம் கோபப்படாமல் அல்லது கோபத்தை கையாள கொள்ளும் பக்குவம் நிச்சயம் கிடைக்கும். உணவு வகையில் உப்பு காரம் கோழிக்கறி போன்றவற்றை குறைப்பது கோபம் ஏற்படும் உணர்வை கட்டுப்படுத்தும்
முந்தைய பதிவிற்கு செல்ல
அடுத்த பதிவிற்கு செல்ல
Comments
Post a Comment